திருச்சியில் அருகே கிணற்றில் விழுந்து 11 வயது சிறுமி உயிரிழப்பு

திருச்சி அருகே, மிளகுபாறை பகுதியில் கிணற்றில் விழுந்து 11 வயது சிறுமி உயிரிழந்தார்; உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.;

Update: 2021-11-27 10:30 GMT

சிவரஞ்சனி

திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர்கள் இரட்டைமலை, தனலட்சுமி. இவர்களின் மகள் சிவரஞ்சனி (வயது 11). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த காரணத்தினால், பள்ளியில் சேர்க்கவில்லை. சிவரஞ்சனியை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து பெற்றோர் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில்,  சிறுமி சிவரஞ்சனியை போலீசார் தேடிவந்தனர். இன்று காலை பெரிய மிளகுபாறை நாயக்கர் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் சிவரஞ்சனியின் சடலம் மிதந்து உள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் சிறுமி கிணற்றில் தற்செயலாக விழுந்துள்ளாரா? அல்லது யாரும் தள்ளி விட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News