திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் நேரு தலைமையில் மாலை அணிவிப்பு
திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.;
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், இனிகோ இருதயராஜ், ஸ்டாலின் குமார், மேயர் அன்பழகன் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.