திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிப்பு

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு 3 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Update: 2022-05-23 16:17 GMT

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் நேரு, அன்பில்மகேஷ்பொய்யாமொழி, மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1347வது பிறந்த தினவிழா இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திருச்சி ஒத்தக்கடை ரவுண்டானாவில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர்கள் கே. என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி ,தியாகராஜன், இனிகோ இருதயராஜ், ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதுதவிர அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் ,கட்சிகள் சார்பிலும் மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Tags:    

Similar News