திருச்சியில் ராமஜெயம் சிலைக்கு அமைச்சர் நேரு தலைமையில் மாலை அணிவிப்பு

திருச்சியில் ராமஜெயம் சிலைக்கு அமைச்சர் நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;

Update: 2022-03-29 06:20 GMT

கே.என். ராமஜெயம் சிலைக்கு அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தி.மு.க. முதன்மை செயலாளரும் ,தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் கே. என். ராமஜெயம். இன்று இவரது பத்தாவது ஆண்டு நினைவு தினமாகும்.

இதனையொட்டி கேர் திருச்சி கல்லூரி வளாகத்தில் உள்ள கே. என் ராமஜெயம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் நேரு தலைமையில் தி.மு‌.க.வினர் பங்கேற்றனர். ராமஜெயம் சிலைக்கு முதலில் அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ,மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காடுவெட்டி தியாகராஜன் எம். எல். ஏ, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, ஸ்டாலின் குமார், சௌந்தரபாண்டியன் ,பகுதி செயலாளர் மோகன்தாஸ் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் அணி அணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Tags:    

Similar News