திருச்சி அ.தி.மு.க அலுவலகத்தில் அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவிப்பு
திருச்சி அ.தி.மு.க அலுவலகத்தில் அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.;
அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாள் விழா திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் ராவணன் உள்பட ஒன்றிய கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.