திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. மகாத்மா காந்தி நினைவு தினம் இந்திய அரசால் மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி திருச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் கவுன்சிலர் சுரேஷ், மாவட்ட செயலாளர் சிவா, மாவட்ட பொருளாளர் சொக்கி. சண்முகம், பகுதி குழு செயலாளர்கள் பார்வதி, சையது அபுதாஹிர், இரா.சுரேஷ் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் முருகன் ஏஐடியுசி மாவட்ட தலைவர் வே. நடராஜா, இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் செல்வகுமார்,கிளைசெயலாளர்கள் பல்கீஸ் சுவேதா,மாதர் சங்க மேற்கு பகுதி செயலாளர் எம்.சுமதி, தோழர்கள் ஜெயக்குமார்,அப்துல் மஜீத்,துரைராஜ், நாகராஜ், முத்தழகு,இளைஞர் பெருமன்ற மேற்கு பகுதி குழு செயலாளர் தருமா,சரவணன், காந்தி, சீனிவாசன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.