காந்தி ஜெயந்தி நாளில் திருச்சி நகரில் ஆடு, மாடு வெட்ட தடை
திருச்சி நகரில் காந்தி ஜெயந்தி தினத்தன்று ஆடு மாடு வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.;
வருகிற 02.10.2021 சனிக் கிழமை அன்று காந்தி ஜெயந்தி தினம் ஆகும்.தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையை கடைபிடித்து வந்த மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளில் ஆடு, மாடு வெட்டுவதற்கு அனுமதி கிடையாது.
அந்த வகையில் திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான ஆடு,மாடு வதைக் கூடங்கள் மற்றும் இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் செயல்படக்கூடாது என மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் அறிவித்து உள்ளார்.