திருச்சியில் உலக ஆண்கள் தினத்தையொட்டி இலவச பொது மருத்துவ முகாம்
திருச்சியில் உலக ஆண்கள் தினத்தையொட்டி இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.;
திருச்சியில் உலக ஆண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தங்கமயில் ஜுவல்லரி, அப்போலோ மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, மாக்ஸ் விஷன் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமில் பல்வேறு விதமான இலவச உடல் பரிசோதனைகள் மற்றும் கண் பரிசோதனைகள் நடைபெற்றது இ. சி. ஜி, சக்கரை அளவு, ரத்த கொதிப்பு, உடல் எடை, கண்களில் இரத்த அழுத்தம் கிட்ட பார்வை, தூர பார்வை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.
இம் முகாமில் 250க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை செய்து கொண்டனர். இம் முகாமில் அவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் மருத்துவர்களால் வழங்கப்பட்டது. முன்னதாக இமாமுகாமினை தங்கமயில் ஜுவல்லரி தங்க நகைமாளிகையின் முதன்மை செயல் அதிகாரி வி. விஷ்வா நாராயண் தலைமை தாங்கி முகாமினை துவக்கி வைத்தார்.
இம் முகாமில் அப்போலோ மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையின் சார்பில் மருத்துவர் தர்மராஜன் தலைமையில் மருத்துவமனை பி. ஆர். ஓ இப்ராஹிம் பாஷா மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு உடல் பரிசோதனைகளை செய்தனர். கண் சம்பந்தப்பட்ட பரிசோதனைகள் திருச்சி மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனையின் சார்பாக கண் புரை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஷிபு வர்க்கி தலைமையில் பி. ஆர். ஓ மாரியப்பன் மற்றும் மருத்துவமன ஊழியர்கள் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கண் பரிசோதனை செய்தனர். மேலும் இம் முகாமில் தங்கமயில் ஜுவல்லரி நகைமாளிகையின் மண்டல மேலாளர் கார்த்திகேயன் கிளை மேலாளர் பழனிகுமார் உதவி மேலாளர் கே. கணேசன் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.