பட்டதாரி ஆசிரியர் பணியிட தேர்விற்கு இணையதளம் மூலம் இலவச பயிற்சி

திருச்சியில் பட்டதாரி ஆசிரியர் பணியிட தேர்விற்கு இணையதளம் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக ஆட்சியர் கூறி உள்ளார்.

Update: 2023-11-08 15:10 GMT

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடித் தேர்விற்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பு துவங்குதல் - போட்டித்தேர்வர்கள் பதிவு செய்தல் குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார்  தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு எண்: 03,2023-ன் படி, 2222 பட்டதாரி ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கான நேரடி நியமனத் தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2023. இதனைத்தொடர்ந்து, போட்டித்தேர்வர்கள் பயன்பெறும் வகையில், மேற்காணும் தேர்வுகளுக்கான (பாட வாரியாக) இலவச பயிற்சி வகுப்பு இணையதளம் வாயிலாக  திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 15.11.2023 முதல் துவங்கப்படவுள்ளது.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டுவரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நடத்தப்படவுள்ள இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள போட்டித்தேர்வர்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் எடுக்க விருப்பமுள்ள பயிற்றுநர்கள் https:///docs.google.com/forms/d/e/1FAIpqlNhntnlalrrrthadb6mt5?-viewform link என்ற இணைப்பில் உள்ள googleform-ஐ பூர்த்தி செய்து, தங்களது பதிவினை உறுதி செய்து கொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது. விருப்பம் தெரிவிக்கும் போட்டித்தேர்வர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பாட வாரியாக இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்துப்பிரிவுகளுக்கும் எடுக்கப்படும். ஆகவே, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இப்போட்டித்தேர்விற்கு தயாராகும் போட்டித்தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயனடையும்படியும், இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 0431-2413510, 9499055901,9499055902 என்ற திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News