எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் எம்.பி. டி. ரத்தினவேல் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமிக்கு திருச்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. டி. ரத்தினவேல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-13 09:41 GMT
எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. டி. ரத்தினவேல் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இதுவரை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி கே. பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திருச்சி ஒருங்கிணைந்த அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் ராஜ்யசபை எம்.பி.யும், தற்போது அ.தி.மு.க. மாநில அமைப்புச்செயலாளருமான டி. ரத்தினவேல் பூங்கொத்து அளித்து எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News