வெளிமாநில காவலர் கொலை: இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் வெளிமாநில காவலர் கொலை வழக்கு தொடர்பாக இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது;

Update: 2023-03-31 17:19 GMT

திருச்சியில் வெளிமாநில காவலாளி தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா மாநகர காவல் ஆணையராக பொறுப்பு ஏற்றதில் இருந்து  திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

அதன்படி, கடந்த 07.02.23-ந்தேதி கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வெளிமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்டு இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தும், விசாரணை செய்தும் மேற்படி மேற்கு வங்காளத்தை சேர்ந்த நபரை கொலை செய்த சரித்திர பதிவேடு ரவடியான பாலமுருகன்( வயது 35,) கணேஷ் (வயது 38,)  மற்றும் ஒரு பெண் ஆகியோரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் எதிரிகள் பாலமுருகன் என்பவர்  மீது கொள்ளையில் ஈடுபட்டடதாக 5 வழக்குகளும், இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருடியதாக 3 வழக்குகளும், இரவு நேர பாதுகாவலரை கொலை செய்ததாக ஒரு வழக்கும்;, பெண்னை பாலியல் தொந்தரவு செய்ததாக ஒரு வழக்கு உட்பட 17 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. மேலும் எதிரி கணேஷ் என்பவர் மீது வழிப்பறியில் ஈடுபட்டதாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

மேற்படி எதிரிகள் பாலமுருகன்  மற்றும் கணேஷ் ஆகியோர் தொடா;ந்து கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி போன்ற குற்றங்கள் செய்து பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும்;எண்ணம் கொண்டவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்படி எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர்சத்தியப்பிரிய மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டர். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்துவரும் மேற்படி எதிரிகளிடம் குண்டர் தடுப்பு ஆணை சார்வு செய்யப்பட்டது.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று பொது மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஊறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News