திருச்சியில் இரண்டாவது நாளாக விவசாயிகள் பட்டை நாமம் அணிந்து போராட்டம்

திருச்சியில் இரண்டாவது நாளாக விவசாயிகள் பட்டை நாமம் அணிந்து போராட்டம் நடத்தினர்.;

Update: 2023-07-29 12:42 GMT

திருச்சியில் இன்று இரண்டாவது நாளாக விவசாயிகள் உடலில் பட்டை நாமம் அணிந்து போராட்டம் நடத்தினர்.

கோதாவரி நதியை காவிரியுடன் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலயுறுத்தி வக்கீல் அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.

அவர்களது போராட்டம் இன்று  2வது நாளாக நீடித்தது. இரண்டாவது நாள் போராட்டத்தில் நெற்றியில் பட்டை நாமம் அணிந்து கொண்டு அரை நிர்வாண காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு 54ரூபாயும் ஒரு டன் கரும்புக்கு 8,100 ரூபாய் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு கூறியதாவது:-

நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவும், அண்ணாமலையும் விவசாயிகளுக்கு அள்ளிக் கொடுப்பதாக பேசி இருக்கிறார்கள்.ஆனால் விவசாயிகளுக்கு எதுவுமே தரவில்லை. தமிழக அரசு இலவச மின்சாரம் கொடுப்பதாக கூறினாலும் கூட விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலையை கொடுப்பதில்லை. மோடி நெல்லுக்கு 5400 தருகிறேன் என்றார். இதுவரை தரவில்லை கரும்பு கண்ணுக்கு 8,500 தருகிறேன் என்றார்கள். அதுவும் தரவில்லை தேர்தலில் வந்தால் காசு கொடுத்து வாக்கை வாங்கிக் வாங்கிக் கொள்வதால் விவசாயிகள் பற்றி கவலைப்படவில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News