பாரதிதாசன் பல்கலைக்கழக கால்பந்து போட்டியில் ஜோசப் கல்லூரி சாம்பியன்

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான கால்பந்து போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.;

Update: 2022-01-03 10:15 GMT

கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற திருச்சி ஜோசப் கல்லூரி  அணி வீரர்கள்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற திருச்சி, தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவர்களுக்கான கால்பந்து போட்டி தஞ்சை பூண்டி, ஏ.வி.வி.எம். ஶ்ரீ புஷ்பம் கல்லூரியில்  நடைபெற்றது.

திருச்சி மண்டலத்திலிருந்து ஜமால் முகமது, செயின்ட் ஜோசப் மற்றும் தஞ்சை மண்டலத்திலிருந்து அதிராம்பட்டினம், காதர் மொஹைதீன், தஞ்சை, அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் ஆகிய நான்கு கல்லூரி அணிகள் லீக் போட்டிகளில் பங்கேற்றன.

இதில், லீக் போட்டிகளில் திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரி, தஞ்சை, அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 2-1 என்ற கோல் கணக்கிலும், அதிராம்பட்டினம், காதர் மொஹைதீன் கல்லூரியை 2-0 என்ற கோல் கணக்கிலும் வென்றதாலும், திருச்சி, ஜமால் முகமது கல்லூரியுடன் 0-0 என்ற கோல் கணக்கில் ஒரு போட்டி டிராவில் முடிந்ததாலும் முதலிடம் பிடித்து திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக கால்பந்து போட்டியில் சாம்பியன் அணியாக திகழ்ந்தது.

திருச்சி, ஜமால் முகமது கல்லூரி, அதிராம்பட்டினம், காதர் மொஹைதீன் கல்லூரியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றதாலும், தஞ்சை, அன்னை, வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனதாலும் இரண்டாவது இடம் பிடித்தது.

அதிராம்பட்டினம், காதர் மொஹைதீன் கல்லூரியை தஞ்சை, அன்னை, வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 3-1 என்ற கோல் கணக்கில் ஒரு போட்டியில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.

கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரி வீரர்களை கல்லூரி செயலாளர் எஸ். பீட்டர், முதல்வர் எம் ஆரோக்கியசாமி சேவியர், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் எம். பெர்க்மென்ஸ், உடற்கல்வி இயக்குனர் ஏ. பிரேம் எட்வின், உதவி உடற்கல்வி இயக்குனர் எஸ். ரெனில்டன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Tags:    

Similar News