திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் தூக்கு கயிற்றுடன் போராட்டம்
திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் தூக்கு கயிற்றுடன் போராட்டம் நடத்தினர்.;
திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் தூக்கு கயிற்றுடன் போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகில் இன்று காலை தரைக்கடை வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆக்கிரமிப்பு அகற்றுதல் என்கிற பெயரில் நெடுஞ்சாலைத்துறை நடத்தி வரும் அராஜக போக்கை கண்டித்து ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதன் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமை தாங்கினார். ஜெயாரதி, ஜீவா உள்ளிட்டவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தல் பங்கேற்ற தரைக்கடை வியாபாரிகளில் சிலர் கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டிக்கொண்டு கோஷம் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.