திருச்சி அருகே அமைச்சர் நேரு முன்னிலையில் வெள்ளப்பாதிப்பு மீட்பு ஒத்திகை
திருச்சி அருகே அமைச்சர் நேரு முன்னிலையில் வெள்ளப்பாதிப்பு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
காவிரி கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் அதில் பாதிக்கப்படுபவர்களை பற்றிய ஒத்திகை நிகழ்ச்சி திருச்சி அருகே மாதவ பெருமாள் ஊராட்சியில் நடைபெற்றது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஒருவரை மீட்டு எப்படி உயிர் பிழைக்க வைப்பது என்கிற ஒத்திகை நிகழ்ச்சியை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன்நேரு முன்னிலையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை சேர்ந்தவர்கள் நடத்தி காட்டினார்கள். இதில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், பழனியாண்டி எம்எல்ஏ, வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.