திருச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
திருச்சி அருகே தனியார் தொழிற்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்பு துறையினரால் நடத்தப்பட்டது.;
திருச்சி தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தீத்தடுப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேதுராப்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தீத்தொண்டு நாளை முன்னிட்டு தீத்தடுப்பு பிரச்சாரம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.
உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன் தலைமையில், நிலைய அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பது பற்றியும் தீ விபத்து நடக்காமல் இருக்க எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.