திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.;

Update: 2021-10-28 14:00 GMT
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி தீயணைப்பு துறையினர்,பாரதிதாசன் பல்கலைக்கழகம்,ரோட்டரி கிளப்புகள், ஜோசப் கண்மருத்துவமனை ஆகியவை இணைந்து தீத்தடுப்பு விழிப்புணர்சி நிகழ்ச்சி நடத்தின. திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு வீரர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தீப்பிடித்தால் அணைப்பது எப்படி,தீவிபத்தில் சிக்கிகொண்டவர்களுக்கு முதலுதவி, தீவிபத்தின் போது பயன்படுத்தப்படும் கருவிகள் குறித்து செயல் முறை விளக்கங்களை செய்து காண்பித்தனர்.

இதில் தீயணைப்புதுறை மாவட்ட தலைவர் அனுசியா, உதவி கோட்ட அலுவலர் கருணாகரன், நிலைய அலுவலர்மில்கியூ ராஜா, ஜோசப் கண்மருத்துவமனை நிர்வாக தலைவர் நெல்சன் ஜேசுதாசன், இயக்குனர் டாக்டர் பிரதீபா, நிர்வாக அதிகாரி  சுபா பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News