திருச்சியில் விவசாயிகள் போராட்டம்: போலீசாருடன் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு
திருச்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போலீசாருடன் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு உண்டானது.
உர விலையை உயர்த்தப்பட்டதை கண்டித்தும், விவசாயிகளுக்கு இலாபகரமான விலை வழங்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் போலீசார் கதவை மூடினர். இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றினர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.