திருச்சியில் விவசாயிகள் செருப்பை தரையில் வைத்து நூதன போராட்டம்
திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் செருப்பை தரையில் வைத்து நூதன போராட்டம் நடத்தினார்கள்.;
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 37-ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து வரும் 26- ஆம் தேதி வரை 46 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக கூறினர்.
அதன் ஒரு பகுதியாக 37-ம் நாளான இன்று விவசாயிகள் போராடும் போராட்ட கோரிக்கைகள் நியாயமற்றது என்று எந்த ஒரு அரசியல் கட்சி நிரூபித்தாலும் விவசாயிகளான எங்களை செருப்பால் அடியுங்கள் என்று கூறி செருப்பை தரையில் வைத்து நூதன உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.