திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்டு 26ம்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்டு 26ம்தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Update: 2022-08-24 11:00 GMT

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 26ம் தேதி காலை  9.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் விவசாய சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள்  கலந்து கொண்டு நீர்ப்பாசனம்,  வேளாண்மை, இடு பொருட்கள், விவசாய நலதிட்டங்கள், கடனுதவி திட்டங்கள் தொடர்பாக விவரங்கள் அறிந்து பயன்  அடையுமாறு ஆட்சியர் பிரதீப்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News