திருச்சியில் மாடிப்படி ஏறும் போது தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
திருச்சியில் மாடிப்படி ஏறும் போது தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
திருச்சி கோட்டை பகுதியில் உள்ள கீழ தேவதானத்தை சேர்ந்தவர் பரமசிவம் மனைவி லோகாம்பாள் (வயது 70) விவசாய கூலி வேலை செய்து வந்தார். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வலது கால், வலது கை சரியாக வராமல் வேலை எதுவும் செய்ய முடியாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி அன்று மதியம் துணிகளை காய வைப்பதற்காக மாடிப்படியில் மெதுவாக ஏறியபோது தடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பகுதியில், இடது கண் பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து அவரது மகன் செல்வம் (வயது 42) என்பவர் கொடுத்த புகாரின் மீது கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.