திருச்சியில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
திருச்சி பாலக்கரையில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி பாலக்கரை படையாட்சி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). வியாபாரியான இவர் கீழப்புதூர் மெயின்ரோட்டில் ஒரு டிபன் கடை அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் கத்தியை காட்டி மிரட்டி மணிகண்டன் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பி விட்டார்.
இது குறித்து மணிகண்டன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக பாலக்கரை ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த இயேசுதாஸ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.