திருச்சியில் காவல் துறை சார்பில் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி
திருச்சியில் காவல் துறை சார்பில் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது.;
கட்டுரை போட்டியை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.
திருச்சி மாநகரத்தில் காவல்துறை சார்பில் 'காவலர் வீரவணக்க நாள்-2022" முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற கட்டுரை மற்றும் ஓவியபோட்டிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு காவலர் வீரவணக்க நாள்-2022 ஐ முன்னிட்டு காவல்துறை சார்பில் கட்டுரை போட்டி, ஓவியபோட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பிக்க உத்தரவிட்டார்.இந்த உத்தரவின் பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அறிவுரைகளின்படி, திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் 'மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு" என்ற தலைப்பின் கீழ் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கட்டுரை போட்டியும், 'காவல் பணிகள் என்ற தலைப்பின் கீழ் ஓவியப் போட்டியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்பேரில், திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் 15.10.22-ம் தேதி காவலர் வீரவணக்க நாள்-2022 ஐமுன்னிட்டு மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளும் 'மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு" என்ற தலைப்பின் கீழ் கட்டுரை போட்டியும், 'காவல் பணிகள்" என்ற தலைப்பின் கீழ் ஓவியப் போட்டியும் இன்று நடைபெற்றது. இந்த போட்டிகைளை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த கட்டுரை போட்டியில் 15 மாணவ-மாணவிகளும், ஓவியப்போட்டியில் 55 மாணவ-மாணவிகளும் என 70 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் திருச்சி மாநகரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மேற்படி கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற முதல் 3 மாணாக்கர்களுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பரிசுகளையும், வாழ்த்துகளையும் வழங்க உள்ளார். பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் எப்போது வழங்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர தலைமையக காவல் துணை ஆணையர். ஆயுதப்படை கூடுதல் காவல் துணை ஆணையர் திருச்சி மாநகரம் கே.கே.நகர் காவல் சரக உதவி ஆணையர் மற்றும் கே.கே.நகர் அரசு உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.