திருச்சி கட்டுமான பொறியாளரிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

திருச்சி பொறியாளரிடம் ரூ.18 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-19 10:45 GMT

திருச்சி மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர். என்ஜினீயரான இவர் கட்டுமான  நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரபாகர் சென்னை ஆவடி 50 அடி ரோடு திருமலை நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் பால் என்பவரிடம் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கிராமம் வெங்கடாபுரம் மார்க்கெட் பகுதியில் உள்ள 12 ஆயிரத்து 674 சதுர அடி நிலத்தை கிரயம் செய்வதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டார்.

பின்னர் அவர் பல்வேறு தவணைகளாக ரூ. பதினெட்டு லட்சம் முன்பணமாக சுரேஷ் பாலுக்கு கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவர் அந்த நிலத்தை கிரயம் செய்து கொடுக்கவில்லையாம். இதையடுத்து பிரபாகர் விசாரணை மேற்கொண்டபோது சுரேஷ் பால் அந்த நிலத்துக்கு உண்டான ஆவணத்தை அடமானமாக வைத்து பணம் கடனாகப் பெற்று இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகர் அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்தப் பணத்தை சுரேஷ் பால் திருப்பித் தரவில்லையாம்.இதையடுத்து பாதிக்கப்பட்ட பிரபாகர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோசலைராமன், சுரேஷ் பால் மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News