தாட்கோ மூலம் பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

Update: 2023-11-01 17:17 GMT

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வார்டுபாய் (ஆண் மற்றும் பெண் உதவியாளர்), உதவி குழாய் பழுது பார்ப்பவர்(பொது), இலரக மோட்டார்வாகன ஓட்டுநர் வீட்டு வேலை செய்பவர்(பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவியாளர் மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி (அழைப்பு மையம்) போன்ற இலவச பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது

தமிழ்நாடு ஆதிதிராவிடர்வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில்  பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தெரிந்தவர்களுக்கு வீட்டு வேலை செய்பவர்(பொது), 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநராகவும் மற்றும் உதவி குழாய் பழுது பாh;ப்பவா; (பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவியாளராகவும், 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வார்டுபாய் ஆண் மற்றும் பெண் உதவியாளராகவும், 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வாடிக்கையாளர் பாரமரிப்பு நிர்வாகி அழைப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

18 முதல் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரா;கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 14 நாட்கள் ஆகும். மேலும் சென்னை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில்; பயிற்சி அளிக்கப்படும். இந்நிறுவனத்தில்; தங்கி படிக்கும் வசதியும் செய்து தரப்படும்.

மேலும் இப்பயிற்சியினை பெற்றவர்களுக்கு பிரபல தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.

இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில பதிவு செய்ய வேண்டும். இப்பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சி கட்டணம் தாட்கோ வழங்கும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியர் அலுவலகச்சாலை, திருச்சிராப்பள்ளி-620001. (0431-2463969) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News