திருச்சியில் நாளை மறுநாள் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
திருச்சியில் நாளை மறுநாள் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.;
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் காலை 10.30 மணிக்குள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ் மற்றும் சுயவிபர குறிப்புகள் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.