திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 19-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19-ந்தேதி நடக்கிறது.;

Update: 2021-11-17 07:54 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.பல்வேறு பணியிடங்களுக்கு தனியார் நிறுவனங்கள் பணிவாய்ப்புகள் வழங்க உள்ளன.

இவ்வேலை வாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் (வயது வரம்பு : 18-க்கு மேல் 35-க்குள்) கலந்து கொள்ளலாம். மேற்படி நேர் காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல், சுயவிவரக்குறிப்பு மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு  திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News