விருது பெற்ற ஆசிரியருக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பாராட்டு
விருது பெற்ற ஆசிரியருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
விருது பெற்ற ஆசிரியருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளையின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினரும், திருச்சி நகர சரகத்தின் சுப்பையா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான ஜீவானந்தன் இந்து தமிழ் திசை நாளிதழின் 'அன்பாசிரியர் விருது' பெற்று உள்ளார்.
இந்த விருதின் மூலம் திருச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதை பாராட்டி,மாநிலப் பொருளாளர் நீலகண்டன் தலைமையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருச்சி மாநகரக் கிளை செயலாளர் அமல்சேசு ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் பெர்ஜித் ராஜன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.