'வீடு தேடி கல்வி திட்டத்தில் அரசியல் இருக்க கூடாது' ஜி.கே. வாசன் கருத்து

‘வீடு தேடி கல்வி திட்டத்தில் அரசியல் இருக்க கூடாது’ என்று த.மா.கா தலைவர் வாசன் திருச்சியில் அளித்த பேட்டியில் கூறினார்.

Update: 2021-10-31 11:30 GMT

திருச்சியில் நடந்த த.மா.கா. நிர்வாகிகள் கூட்டத்தில் ஜி.கே. வாசன் பேசினார்.

தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி திருச்சியில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நடைபெற இருக்கின்ற ஊரக, நகர்ப்புற தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிக பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.இல்லம் தேடி கல்வி திட்டம் கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலம் மாணவர்களின் கல்வி என்பது நாட்டினுடைய வளர்ச்சி.இதற்கு அரசியல் சாயம் தேவையில்லை.

தமிழ்நாடு தினம் குறித்து தமிழ் ஆர்வலர்கள், தமிழ் பற்றாளர்கள் மத்தியில் ஓற்றை கருத்து இல்லை, மாற்றுக்கருத்து பலருக்கு இருக்கிறது. கொரோனா குறைந்து வரும் சூழ்நிலையில் டெங்கு, மலேரியா பரவக்கூடிய நிலை இருக்கிறது. அரசு மதுபானக் கடைகள் திறப்பது எந்த விதத்திலும் சரியல்ல, நியாயமில்லை.

முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையைம  விட்டுக்கொடுக்க கூடாது, முல்லைப் பெரியாறு விவகாரத்தில் விவசாயிகளுக்கு தமிழக அரசு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும்.

மழை காலம் என்பதால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை, உரத்தட்டுப்பாடு 100 சதவிகிதம் இல்லாது, அரசு ஏற்படுத்த வேண்டும்.நீட்டில் அரசியல் இருப்பதால், வீடு தேடி கல்வி போகும்போது எந்த ஒரு அரசியல் பாகுபாடு இருக்கக்கூடாது.

திரையரங்குகள் பாதுகாப்போடு இருக்க வேண்டும். பாதுகாப்பு 100 சதவீத மக்கள் கடைபிடிக்க வேண்டும்.தீபாவளிக்கு வெளியாகிற ரஜினிகாந்த் படம் வெற்றியடைய வேண்டும், ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். மற்ற நடிகர்கள் படம் வெற்றியடைய வேண்டும்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு சாமானியாரை பாதிக்கிறது அனைத்து தரப்பு மக்களையும் தொடர்ந்து பாதிக்கிறது. சர்வதேச தாக்கம் என்றால் கூட பெரும்பாலான நாடுகளில் இதே நிலைதான் தொடர்கிறது என்றால் கூட மத்திய, மாநில அரசுகள் இணைந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைப்பதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு அதிகப்பங்கு எடுத்து பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு சூழ்நிலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.7 பேர் விடுதலையில் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News