திருச்சியில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த கலந்தாய்வு கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.;
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் மற்றும் களப்பணிகள் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க , தி.மு.க, ம.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சிறப்பு அரசு செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார், மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.