எடப்பாடி பழனிசாமி 6 நாள் சூறாவளி பிரச்சாரம் 7-ந்தேதி தொடங்குகிறார்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து 6 நாள் சூறாவளி பிரச்சாரத்தை 7-ந்தேதி தொடங்குகிறார்.;

Update: 2022-02-04 16:04 GMT

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.

சுமார் 7 ஆண்டு கால இடைவெளிக்கு பின்னர் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சி வேட்பாளர்களும் சுயேச்சைகளும் மிகுந்த ஆர்வமுடன் தங்கள் பகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். சில இடங்களில் வேட்புமனுத்தாக்கல் திருவிழா போல் காணப்பட்டது. மேளம் அடித்தும் வானவேடிக்கைகளுடனும், குத்தாட்டம் போட்டும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் .ஊர்வலமாக சமூக இடைவெளியின்றி வந்த அவர்கள் கொரோனா விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டனர்.

இந் நிலையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி 6 நாள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். அவரது சுற்றுப்பயண அட்டவணையை அ.தி.மு.க.தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

அது இதோ.

பிரவரி 7ம்தேதிகாலை 8.30 மணி- சிவகாசி மாநகராட்சி, மதியம் 12.30 மணி நாகர் கோவில் மாநகராட்சி,  பிற்பகல் 3 மணி திருநெல்வேலி மாநகராட்சி,  மாலை 5 மணி தூத்துக்குடி மாநகராட்சி.

பிப்ரவரி 8ந்தேதி காலை 9 மணி மதுரை மாநகராட்சி, 11.30 மணி திண்டுக்கல் மாநகராட்சி, பிற்பகல் 3 மணி கரூர் மாநகராட்சி, மாலை 5.30 மணி திருச்சி மாநகராட்சி.

பிப்ரவரி 10ம் தேதி காலை 9மணி வேலூர் மாநகராட்சி, 11.3௦ மணி காஞ்சி புரம் மாநகராட்சி, பிற்பகல் 12.30 மணி தாம்பரம் மாநகராட்சி, மாலை 6 மணி -ஆவடி மாநகராட்சி,

பிப்ரவரி 11ம் தேதி காலை 9.30 மணி  வட சென்னை, தென்சென்னை, மாலை 5 மணி- சென்னை புறநகர்,

பிப்ரவரி 14ம் தேதி காலை 9 மணி கோவை மாநகராட்சி,  காலை 11 மணி- திருப்பூர் மாநகராட்சி,  பிற்பகல் 5 மணி -ஈரோடு மாநகராட்சி,

பிப்ரவரி 15ம் தேதி காலை 9 மணி கும்பகோணம் மாநகராட்சி, காலை 11 மணி- தஞ்சாவூர் மாநகராட்சி.

Tags:    

Similar News