எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார், மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் பரஞ்ஜோதி.;

Update: 2022-04-28 16:06 GMT

எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மு. பரஞ்ஜோதி.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகிய பதவிகளுக்கான அமைப்பு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை அ.தி.மு.க. தலைமை கழகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அதன்படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையொட்டி பரஞ்ஜோதி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

Tags:    

Similar News