திருச்சி முன்னாள் எம்.எல்.ஏ. பரணிகுமார் இல்லத்தில் துர்கா ஸ்டாலின்
துர்கா ஸ்டாலின் திருச்சி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. பரணி குமார் வீட்டில் நலம் விசாரித்தார்.;
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர். அவர் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், தாயார் கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்துள்ளார்.
அந்தவகையில் மகாளய அமாவாசை தினம் என்பதால் நேற்று இரவு சாலை மார்க்கமாக காரில் திருச்சிக்கு வந்த துர்கா ஸ்டாலின் சமயபுரம் டோல் பிளாசா அருகில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி வரை நடைபயணமாக வந்தார். பின்னர் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்து தனது வேண்டுதலை முடித்துவிட்டு திருச்சியிலேயே தங்கினார்.
பின்னர் இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்ற அவர் ரெங்கநாதரையும், தாயாரையும் தரிசனம் செய்தார். பின்னர் திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள திருச்சி முன்னாள் நகர்மன்ற தலைவர் மறைந்த பாலகிருஷ்ணனின் மகனும், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பரணிகுமார் இல்லத்திற்கு சென்ற துர்கா ஸ்டாலின் அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.