திருச்சி சரகத்தில் அதிரடி சோதனை: 245 வழக்கு பதிவு - 243 பேர் கைது

போதை மற்றும் புகையிலை பொருட்கள் தொடர்பாக, திருச்சி சரகத்தில் நடைபெற்ற சோதனையில், 245 வழக்குகள் பதிந்து, 243 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-12-04 00:15 GMT

திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் அறிவுரையின் பேரில்,  திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் புகையிலை மற்றும் போதை வஸ்துக்கள் ( Gutkha ) சம்மந்தமாக கடந்த 2,ஆம் தேதி, சிறப்பு அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதில், திருச்சி சரகத்தில் மொத்தம் 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ( திருச்சி -84 , புதுக்கோட்டை 43 , கரூர் -33 , பெரம்பலூர் -23 மற்றும் அரியலூர் -62 ) பதிவு செய்யப்பட்டு,  243 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் ரூ. 1 லட்சத்து 53 ஆயிரத்து 573 மதிப்புள்ள, சுமார் 93.500 கிலோ புகையிலை மற்றும் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன

Tags:    

Similar News