திருச்சி மாநகரில் அக்டோபர் 11-ம்தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

திருச்சி மாநகரில் அக்டோபர் 11ம்தேதி (நாளை மறுநாள்) குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-09 14:28 GMT

திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நற்பணி நிலையம். டர்பைன் நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம், மற்றும் ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டு குடிநீர் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்திடும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி 10-10-23 அன்று காலை 9 .45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப் பட உள்ளது.

இதன் காரணமாக கம்பரசம்பேட்டை தலைமை நீர் பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை ஆகிய பகுதிகளிலும் டர்பைன் நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும் ,பெரியார் நகர் கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லைநகர், அண்ணா நகர், புத்தூர் ,காஜா பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யகொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்பா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளிலும் அய்யாளம்மன் படித்துறை கலெக்டர் வெல் நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் புகழ் நகர், பாரி நகர், பழைய எல்லக் குடி, காவிரி நகர், கணேஷ் நகர் ,சந்தோஷ் நகர், ஆலத்தூர் ,கே.கே. கோட்டை மற்றும்பிராட்டியூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராஜிநகர் ,பிராட்டியூர், எடமலைப்பட்டி புதூர், விஸ்வாஸ் நகர், ஜெயா நகர் மற்றும் பிராட்டியூர் காவிரி நகர் ஆகிய பகுதிகளிலும் 11 -10 -23 அன்று ஒருநாள் குடிநீர் வினியோகம் இருக்காது.

12 -10 -23 முதல் வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News