திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து
திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பொது தரைமட்ட கிணறு ஆண்டவர் ஆசிரமம் நீரேற்று நிலையத்திலிருந்து பழைய கரூர் பிரதான சாலை வழியாக செல்லும் குடிநீர் உந்து குழாய் இன்று (04.03.2024) உடைப்பு ஏற்பட்டத்தின் காரணமாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால், பழைய எல்லக்குடி, ஆலத்தூர், புகழ் நகர், பாரிநகர், சந்தோஷ் நகர் மற்றும் கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 05.03.2024 ஒருநாள் இருக்காது.
06.03.2024 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் மாநகராட்சி ஆணையர் சரவணன் தெரிவித்துள்ளார்.
கோடை காலம் என்பதால் தற்போது மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக தண்ணீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டு இருப்பது மாநகர மக்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.