திருச்சி மாநகராட்சி பகுதியில் வருகிற 14ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து
திருச்சி மாநகராட்சி பகுதியில் வருகிற 14ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
திருச்சி மாநகராட்சி பகுதியில் வருகிற 14ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப் பணி நிலையம், டர்பைன் நிலையம்,பெரியார் நகர் கலெக்டர்வெல் நீரேற்று நிலையம் மற்றும் ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டு குடிநீர் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்திடும் கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி 13 -6 -2023 அன்று காலை 9 .45 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை ஆகிய பகுதிகளிலும், டர்பைன் நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார் நகர் கலெக்டர் வெல் நிலையத்தில் அடங்கும் தில்லை நகர், அண்ணா நகர், புத்தூர், காஜாப்பேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யகொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்பா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் காஜாமலை காலனி ஆகிய பகுதிகளிலும், அய்யாளம்மன் படித்துறை கலெக்டர் வேல் நீர் பணி நிலையத்தில் அடங்கும் புகழ் நகர், பாரி நகர், பழைய எல்லக்குடி காவிரி நகர், கணேஷ் நகர், சந்தோஷ் நகர், ஆலத்தூர், கே.கே. கோட்டை மற்றும் பிராட்டியூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் அடங்கும் காந்திநகர், எடமலைப்பட்டி புதூர், விஸ்வாஸ் நகர், ஜெயா நகர் மற்றும் பிராட்டியூர் காவிரி நகர் ஆகிய பகுதிகளிலும் 14 -6 -23 ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது.
15 -6 -2023 முதல் வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.