திருச்சி புத்தூர் பகுதியில் 12-ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து
திருச்சி புத்தூர் பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக 12-ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.;
திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் கொள்ளிடம் கிணறு எண் 3 நீர் உந்து நிலையத்தில் இருந்து உந்தப்படும் பிரதான நீருந்து குழாயில் உறையூர் நாச்சியார் கோயில் அருகில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனை சீரமைக்கும் பணி 11ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 12ம் தேதி ஒரு நாள் மட்டும் புத்தூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் அறிவித்து உள்ளார்.