உங்களுக்கு காவல் துறை வாகனங்கள் வேண்டுமா? ஜூன் 8-ம் தேதி பொது ஏலம்

உங்களுக்கு காவல் துறை வாகனங்கள் வேண்டும் என்றால் ஜூன் 8-ம் தேதி திருச்சியில் நடக்கும் பொது ஏலத்தில் பங்கேற்கலாம்.

Update: 2023-06-01 12:08 GMT

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா.

திருச்சியில் காவல் துறை வாகனங்கள் வருகிற எட்டாம் தேதி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல்துறையில் பல ஆண்டுகளாக  பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட Tempo Traveller-05, Tata Sumo, Tata Spacio, Grande, Tavera என 09 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்- 4 என ஆக மொத்தம் 13 வாகனங்கள் பொது ஏல முறையில் ஏலம் நடைபெற உள்ளது.

வருகின்ற (08.06.2023)-ம் தேதி 10 மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் (05.06.2023) முதல் (07.06.2023)-ம் தேதி வரை தினந்தோறும் காலை 10:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரை திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.

மேலும் வாகனத்தை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான (08.06.2023)-ம் தேதி காலை 08:00 மணிமுதல் 10:00 மணிவரை தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய்.5000/- முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம்சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் இரண்டு சக்கர வாகனத்திற்கு 12 சதவீதம்சரக்கு மற்றும் சேவை வரி (GST)-யையும் சேர்த்து செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தகவலை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News