திருச்சி மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் யார், யார் தெரியுமா?
திருச்சி மாநகராட்சி நிலைக்குழு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று பதவி ஏற்றனர்.;
திருச்சி மாநகராட்சி நிலைக்குழு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மேயர் அன்பழகன், ஆணையர் முஜிபுர் ரகுமானுடன் உள்ளனர்.
திருச்சி மாநகராட்சியில் 5 மண்டல குழு தலைவர்கள் நேற்று முன்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார்கள்.
இதனைத்தொடர்ந்து நிலைக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இதில் கணக்கு குழு தலைவராக 49-வது வார்டு மாமன்ற உறுப்பினர் லீலா, பொது சுகாதார குழு தலைவராக 42-வது வார்டு மாமன்ற உறுப்பினர் நீலமேகம், கல்விக் குழுத் தலைவராக 63 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொற்கொடி, பணிகள் குழு தலைவராக 58வது வார்டு மாமன்ற உறுப்பினர் கவிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் இவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நியமனக் குழு உறுப்பினராக 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. நிலைக் குழு தலைவர்கள், நியமன குழு உறுப்பினர் ஆகிய அனைவருமே தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது