திருச்சி சிவா எம்.பி. மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. புகார்
திருச்சி சிவா எம்.பி.மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க. சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
திருச்சி சிவா எம்.பி யின் மகன் சூர்யா சிவா. இவர் பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவின் மாநில செயலாளராக உள்ளார். சூர்யா சிவா நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மீதும் அவருடைய சகோதரர் மறைந்த கே.என்.ராமஜெயம் மீதும் தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினர் மத்திய மண்டல காவல் துறை தலைவரிடம் மனு அளித்தனர். அதே போல சூர்யா சிவா மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாக கூறி சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்களும் காவல் துறை தலைவரிடம் மனு அளித்தனர்.