திருச்சி 55-வது வார்டு தி.மு.க.வேட்பாளர் வெ. ராமதாஸ் வேட்பு மனு தாக்கல்
திருச்சி மாநகராட்சி 55-வது வார்டில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் வெ. ராமதாஸ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.;
திருச்சி மாநகராட்சி 55 வது வார்டு தி.மு.க. வேட்பாளராக சிவா ஆப்டிக்கல்ஸ் வெ. ராமதாஸ் கட்சி தலைமையினால் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வேட்பாளர் வெ. ராமதாஸ் மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் உதவி ஆணையர் செல்வபாலாஜியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து தனது வார்டில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து தனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யும்படி கேட்டுக்கொண்டார். சென்ற இடங்களில் எல்லாம் அவருக்கு பிரமுகர்களும், தொண்டர்களும் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
வெ. ராமதாஸ் ஏற்கனவே 3 முறை இதே வார்டில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இருந்தாலும் தொடர்ந்து வார்டில் மக்கள் பணியாற்றுவதில் இருந்து அவர் ஒதுங்கி விடவில்லை. பெரு வெள்ளப்பெருக்கினால் கருமண்டபம் பகுதி மக்கள் பாதிக்கப்பட்ட போதும், கொரோனா காலத்திலும் தனது வார்டில் உள்ள மக்களுக்கு உதவி செய்தார்.
தன்னை வெற்றி பெற செய்தால் மாமன்ற உறுப்பினர் என்ற தகுதியுடன் இன்னும் கூடுதலாக பணியாற்றுவேன என ராமதாஸ் வார்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.