திருச்சி 55வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் செல்வநகரில் வாக்கு சேகரிப்பு
திருச்சி மாநகராட்சி 55வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் செல்வநகரில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.;
திருச்சி மாநகராட்சி 55வது வார்டில் தி.மு.க. வேட்பாளராக சிவா ஆப்டிகல்ஸ் வெ. ராமதாஸ் போட்டியிடுகிறார். இந்த வார்டில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என வாக்குறுதி அளித்து வருகிறார் ராமதாஸ்.
வேட்பாளர் ராமதாஸ் நேற்று கருமண்டபம் பகுதியில் உள்ள செல்வநகரில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு இஸ்லாமியர்கள் பெருவாரியாக ஆதரவு தெரிவித்தனர். வயது முதிர்ந்த பெரியவர்கள் பலர் ராமதாஸ் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.