திருச்சி 60வது வார்டு தி.மு.க. வேட்பாளர் காஜாமலை விஜய் வாக்கு சேகரிப்பு

திருச்சி 60-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் காஜாமலை விஜய் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.;

Update: 2022-02-11 16:58 GMT

இஸ்லாமிய பெண்களிடம் வாக்கு சேகரித்தார் தி.மு.க. வேட்பாளர் காஜாமலை விஜய்.

திருச்சி மாநகராட்சி 60வது வார்டு தி.மு.க. வேட்பாளராக பகுதி செயலாளர் காஜாமலை விஜய் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் பம்பரமாக சுழன்று தேர்தல் பணியாற்றி வருகிறார் விஜய்.

காஜாமலை முஸ்லிம் தெருவில் இன்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட விஜய் இஸ்லாமிய பெண்களிடம் தனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போது அவரிடம் இஸ்லாமிய பெண்கள் சிறுபான்மையினருக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக விளங்கும் தி.மு.க.விற்கு தான் எங்கள் ஓட்டு என உறுதி அளித்தனர்.

Tags:    

Similar News