திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் பேச்சு வார்த்தை இழுபறி

திருச்சி மாநகராட்சியில் வார்டு பங்கீடு குறித்த திமுக கூட்டணி கட்சிகள் பேச்சு வார்த்தை இழுபறியில் முடிந்தது..

Update: 2022-01-29 13:00 GMT

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக முதன்மை செயலாளரும்,  நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு முன்னேற்ற கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வார்டு ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

காலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கூட்டணி கட்சிகளுக்கு 14 வார்டுகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் சமரசம் ஏற்படாததால், மீண்டும் இன்று மாலையில் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதோடு திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான வார்டுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபற்று வருகிறது. 

இக்கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ, மாநகர செயலாளர் அன்பழகன்,சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், பழனியாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News