மாற்றம் அமைப்பின் சார்பில் கொரோனாவை தடுக்க துண்டு பிரசுரம் வினியோகம்
திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில் கொரோனாவை தடுக்க துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் கொரோணா விழிப்புணர்வு துண்டறிக்கை முக கவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுபேற்றுள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமாரை சந்தித்து அவரது பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், அமைப்பின் நிர்வாகிகளிடம் கொரோனா விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் முககவசத்தை வழங்கி விழிப்புணர்வு நிகழ்வை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்க்கு வந்திருந்த பொதுமக்களுக்கும் சாலையில் சென்ற பொதுமக்களுக்கும் கொரோனா விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் கெளரவ தலைவரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் எஸ்.அண்ணாதுரை, துணை தலைவர் வே. நடராஜா துணை தலைவர் டாக்டர் லாரன்ஸ், வழக்கறிஞர் ஆறுமுகம், பேராசிரியர் மணி பிரகஸ்பதி, மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா, இணை செயலாளர் அல்லிக்கொடி, விளையாட்டு பிரிவு செயலாளர் சுரேஷ் பாபு, சிலம்ப மாஸ்டர் மாணிக்கம், பார்த்திபன், மதியழகன், ஜக்கிஷா பிரிட்டோ மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.