திருச்சி மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் பனைமரக்கன்றுகள் வினியோகம்

திருச்சி மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் பனைமரக்கன்றுகள் வினியோகம் செய்யப்படும் என ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-06-10 16:37 GMT

பனந்தோப்பு (கோப்பு படம்)

திருச்சி மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் பனை மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;-

தமிழ்நாட்டில் ஐந்து கோடி பனை மரங்கள் உள்ளன. சுமார் மூன்று லட்சம் குடும்பங்கள் பனை ஓலைகள், நார்கள் ஆகியவற்றை கொண்டு கூடை பின்னுதல், பாய் முடைதல், கயிறு திரித்தல் போன்ற தொழில்களை சார்ந்தும் 11 ஆயிரம் பனைத் தொழிலாளர்கள் நுங்கு அறுவடை, பதநீர் இறக்குதல் ஆகிய தொழில்களை சார்ந்தும் பனை மரங்களை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

எனவே பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பனை விதைகள் பனை மரக் கன்றுகள் பனைமரம் ஏறும் விவசாயிகளுக்கான உபகரணங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பட விருப்பம் உள்ள விவசாயிகள் அதிகபட்சமாக 50 விதைகளும், பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள் ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு 100 விதைகளும் மற்றும் பனைமர கன்றுகள் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 15 பனைமரக்கன்றுகளும் பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள் ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவதற்கு அதிகபட்சமாக 30 கன்றுகள் 100% மானியத்தில் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பனை ஏறுவதற்கான உரிமம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பனை ஏறும் உபகரணங்கள் 75% மானியத்தில் அதிகபட்சமாக ரூ.4, 500 வரையில் வழங்கப்படும். பனைசார்ந்த சிறு தொழில் செய்பவருக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் 50% மானியத்தில்  ரூ.4 ஆயிரம் அளவில் வழங்கப்படும். எனவே இந்த திட்டத்தில் பயனடைய விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவியக்குனர்களை அணுகி பயனடைய வேண்டும் என்றும் மேலும் கூறியுள்ளார்.

Tags:    

Similar News