திருச்சி புத்தூரில் இடிந்து விழும் நிலையில் இருந்த வீடு அகற்றம்
திருச்சி புத்தூரில் இடிந்து விழும் நிலையில் பொதுமக்களை பய முறுத்திய வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.;
திருச்சி புத்துார் தெற்கு முத்துராஜா தெருவில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் யாரும் குடியில்லாத நிலையில், பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வீட்டின் நடுவே பெரிய விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் அந்த வீடு இருந்தது. இது குறித்து மாநகராட்சிக்கு அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்து புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் அங்கு சென்று ஆய்வு நடத்திய மாநகராட்சி அதிகாரிகள் அந்த வீட்டை இடிக்க முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து முருகேசனின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் ஒப்புதல் பெறப்பட்டு, அவரது முன்னிலையில் அந்த வீட்டினை மாநகராட்சி அதிகாரிகள் பொக்ளைன் இயந்திரம் உதவியுடன் இடித்து தள்ளினர்.