திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிஇஎல்சி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
திருச்சியில் டிஇஎல்சி அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
டி.இ.எல்.சி. என்று அழைக்கப்படும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் சுமார் இரண்டரை லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த திருச்சபையில் 14 -வது பேராயர் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும். அங்குள்ள செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.இ.எல்.சி நலச்சங்கத்தினர் தலைவர் மெகர் அந்தோணி தலைமையில் திருச்சி, கண்டோன்மெண்ட் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் அந்தபகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.