முசிறியில் ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அழைப்பு
முசிறியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.;
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் அறிவிப்பின்படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா தி.மு.க. அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 25.7.2022 (திங்கள் கிழமை) காலை 10 மணியளவில் முசிறி கைக்காட்டி அருகில் நடைபெற உள்ளது.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் திரளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.